முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Feb 05, 2025 02:27 AM GMT
Chandramathi

Chandramathi

நாட்டில் அனைவரும் முடிந்தவரை முகக்கவசங்களை அணிந்து கொள்வது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

உடனடியான மருத்துவ ஆலோசனை

இதன்படி இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Advise The Public To Wear Masks

இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும்.

இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அனைவரும் முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.