கண் நோய் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
By Fathima
கண் நோய் பரவுவதை தடுக்க இயன்றவரை நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருப்பதும் நோயாளிகளுடன் தொடர்பை தவிர்ப்பதும் அவசியம் என தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.
கண் சிவத்தல், கண்களில் வலி, கண்களைத் திறப்பதில் சிரமம், கண்களில் நீர் வடிதல், வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமம் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.