கெஹலிய தாக்கல் செய்த மனு! உத்தரவை ஒத்திவைத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Keheliya Rambukwella
By Mayuri Sep 04, 2024 11:02 AM GMT

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபின் ஊசி மருந்தை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான வழக்கு நிறைவடையும் வரையில், தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, கெஹலிய ரம்புக்வெல்ல மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் குழாமின் தீர்மானம்

குறித்த மனு மீதான உத்தரவை இன்றைய தினம் பிறப்பிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.

கெஹலிய தாக்கல் செய்த மனு! உத்தரவை ஒத்திவைத்தது மேன்முறையீட்டு நீதிமன்றம் | Adjournment Of Order On Petition Filed By Kehalia

எனினும், குறித்த தீர்மானத்தை எதிர்வரும் அடோபர் மாதம் 3ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW