வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள மேலதிக கொடுப்பனவு

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By K. S. Raj Oct 23, 2023 02:25 PM GMT
K. S. Raj

K. S. Raj

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஐயாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.

குறித்த திட்டமானது அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

முன்னோடித் திட்டம் 

இக்காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தரின் சம்பளத்திற்கு மேலதிகமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவும் கைது செய்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள மேலதிக கொடுப்பனவு | Additional Allowance To Be Given To Police Officer

மேலும், அதிகாரிகளை ஊக்குவிக்கவும், வீதி விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.