கிராம அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Mayuri Jul 01, 2024 03:06 AM GMT
Mayuri

Mayuri

போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கைக்காக கிராம சேவைக் களங்களில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரிக்க பொலிஸ் பிரிவு மட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இந்த அறிக்கையை தயாரிப்பது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் குறிக்கோள், அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடிய சந்தையை உடைப்பதும் ஆகும்.

கிராம அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு | Action To Eliminate Drugs In Village To Gs

யுக்திய நடவடிக்கை

மேல் மாகாணத்தில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நூறு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டால் குறைந்தது ஐம்பது போதைக்கு அடிமையானவர்களாவது கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் கடந்த 6 மாதங்களில் வெறும் மூன்று வீதமே காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில், ஒன்பது மாகாணங்களில் ‘யுக்திய’ நடவடிக்கைகளின் மூலம் 184,862 போதைப்பொருள் தொடர்பான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 5565 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW