பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

By Fathima May 31, 2023 09:34 PM GMT
Fathima

Fathima

தேவையற்ற நபர்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பணிகளில் இருந்து நீக்கி உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தற்போது, ​​மக்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பதற்காக சுமார் 5,400 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த மக்களுக்கும் இடங்களுக்கும் பாதுகாப்பு தேவையா என்பதைக் கண்டறிந்து மதிப்பீடு செய்யுமாறு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.