அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை(Archchuna Ramanathan) கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்து அர்ச்சுனா தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், இது தொடர்பான ஆதாரங்களையும் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். இதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து எமது செய்திப்பிரிவு பொலிஸ் ஊடகப் பேச்சாளரை தொடர்பு கொண்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |