நாட்டில் அதிகரித்து வரும் கொலை-கொள்ளை சம்பவங்கள்: எடுக்கப்படவுள்ள சிறப்பு நடவடிக்கை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Fathima Aug 25, 2023 07:58 AM GMT
Fathima

Fathima

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முற்றாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் நாட்டை மாற்றியமைப்பதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸார் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட குற்ற செயல்கள் 

நாட்டில் சமீபகாலமாகத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கணிசமான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டில் அதிகரித்து வரும் கொலை-கொள்ளை சம்பவங்கள்: எடுக்கப்படவுள்ள சிறப்பு நடவடிக்கை | Action On Rising Crime In Sri Lanka

புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்றும் (24.08.2023) மன்னார் அடம்பன் பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்றும் (25.08.2023) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.