மதுபானசாலை உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு

Anura Kumara Dissanayaka Sri Lanka Excise Department of Sri Lanka
By Laksi Oct 03, 2024 07:55 AM GMT
Laksi

Laksi

பெருந்தொகையான வரியை செலுத்தாத மதுபானசாலை உற்பத்தியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய மதுபானசாலைகளுக்கு இனி அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மதுபானசாலைகளின் வரி நாட்டுக்கு முக்கியமானது. 2023-2024ஆம் ஆண்டுக்கான வரி நிலுவையாக 1.8 பில்லியன் ரூபா உள்ளது.

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நிலுவைத் தொகை

நிலுவைத் தொகையை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்களின் 2025ஆம் ஆண்டிற்கான உரிமத்தை நீடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுபானசாலை உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு | Action Against Breweries Anura Order

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிலுவையை செலுத்தாத உரிமையாளர்களின் அனுமதி பறிக்கப்பட்டு, புதியவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

நாட்டில் சிறுவர்களிடையே பல் நோய்கள் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே பல் நோய்கள் அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW