ஜனாதிபதி செயலகத்தின் பெயர் பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம்
Presidential Secretariat of Sri Lanka
President of Sri lanka
By Fathima
ஜனாதிபதி செயலகத்தின் பெயர் பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலானது இன்று (21.09.2023) ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜேவர்தனவினால் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பில்லாத இவ்வாறான பெயர் பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஆள்மாறாட்டமாக கருதப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.