கடந்த 24 மணித்தியாலயத்தில் பதிவான விபத்துக்கள் : பொலிஸ் ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 10 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று (21) ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மல்லியப்பு பகுதியில் குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 46 பேர் காயமடைந்து ஹட்டன் திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 12 வயது குழந்தையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளனர்.
அதிகரித்துள்ள விபத்து
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்து, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம இடைமாற்றுக்கு அருகில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்கள் காலி கோட்டை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் மற்றும் 75 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |