அம்பாறையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள்

Sri Lanka Police Ampara Eastern Province Accident Kalmunai
By Rakshana MA Jun 10, 2025 12:30 PM GMT

கிழக்கில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை

சட்ட நடவடிக்கை

அண்மையில் சம்மாந்துறை விளினியடி சந்தியில் மாடுகளால் விபத்து ஏற்பட்ட முச்சக்கரவண்டி சேதமடைந்ததுடன் சாரதி காயமடைந்திருந்தார்.

அம்பாறையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் | Accidents Due To Cattle In Ampara Srilanka

அதேபோல, இன்றைய தினம் மோட்டார் சைக்கிள்கள் இரண்டுடன் கட்டாக்காலி மாடுகள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வந்த இருவரும் கை மற்றும் கால்களில் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் சர்ச்சை தகவல்களை வெளியிட்ட எஹியாகான்

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் சர்ச்சை தகவல்களை வெளியிட்ட எஹியாகான்

2025ஆம் ஆண்டிற்கான இலங்கை கலால் வருவாய் மாற்றம்

2025ஆம் ஆண்டிற்கான இலங்கை கலால் வருவாய் மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW