பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள்

Sri Lanka Accident Srilanka Bus
By Raghav Jul 04, 2024 12:39 PM GMT

எல்ல (Ella) - வெல்லவாய (Wellawaya) பிரதான வீதியில் ராவணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பதுளையில் (Badulla) இருந்து இன்று (04) மகும்புர வரை பயணிகளுடன் பயணித்த பேருந்து, கடுமையான  வளைவு ஒன்றின் அருகே சென்ற போது ஒரே தடவையில் தடுப்பு  பழுதடைந்துள்ளது.

பின்னர் விபத்தை உணர்ந்த பேருந்தின் சாரதி, பேருந்தை மலையில் மோதச் செய்து நிறுத்தியுள்ளார்.

மேலதிக விசாரணை

அதன்படி சாரதி அவ்வாறு செய்யவில்லை என்றால், பேருந்து செங்குத்தான பாறையில் உருண்டு விழுந்து பல உயிரிழப்புகள் ஏட்பட்டிருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள் | Accident On Ella Wellawaya Main Road

விபத்தின் போது பேருந்தின் படுகாயமடைந்த சாரதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW