மாமாங்கம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலி
மட்டக்களப்பு - மாமாங்கம் பகுதியில் நேற்று(21) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்குள்ளான இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மாமாங்கம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆர்.சுபிஷான் என்ற இளைஞனே இவ்வாறு விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், விபத்தில் உயிரிழந்த இளைஞரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |