கனடாவில் கோர விபத்து! 15 பேர் பலி- 10 பேர் படுகாயம்
Government of Canada
Canada
Accident
By Fathima
மத்திய கனடாவின் மனிடோபா மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரவூர்தியும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேற்றிரவு (16.06.2023) இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணம்
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 25 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வயோதிபர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.