புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து! மூவர் பலி
Sri Lanka Police
Puttalam
Sri Lanka Police Investigation
Accident
Death
By Fathima
புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவண்ட குளம் பகுதியில் இன்று (12.01.2026) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் ஒன்றும், வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து
சம்பவத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானக சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.