கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

Kilinochchi
By Mayuri Aug 27, 2024 05:40 AM GMT

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நபரொருவர் உயிரிழப்பு

விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு | Accident At Kilinochchi

பேருந்தை முந்திச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW