யாழில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலேயே பலி

Sri Lanka Police Jaffna
By Mayuri Feb 18, 2025 02:00 PM GMT
Mayuri

Mayuri

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரியாலை, மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

டிப்பர் மோதி விபத்து

யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலேயே பலி | Accident At Jaffna

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.