கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய லொறி! 20 பேர் வைத்தியசாலையில்

Sri Lanka Police Colombo Accident
By Fathima Jun 09, 2023 03:12 AM GMT

கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (09) அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 20 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் லொறியின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.