மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் உயிரிழப்பு.

Batticaloa Sri Lanka
By Nafeel Apr 15, 2023 05:18 AM GMT

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாய்ந்தமருது வேப்பையடி வீதியைச் சேர்ந்த ஜமால்டின் ஹாரூன் வயது 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடும் வேகம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.