வேதனத்தை அதிகரிக்காத நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Cabinet
By Mayuri Jul 10, 2024 11:36 AM GMT
Mayuri

Mayuri

இயலுமை இருந்தும் தங்களது தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட வேதனத்தைச் செலுத்தாத பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் செய்துள்ள காணிக் குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்குரிய சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம்குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஆலோசனை

வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு செலுத்த வேண்டிய வேதனம் தொடர்பில் மதிப்பீடு செய்யுமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு அண்மையில் அமைச்சரவை ஆலோசனை வழங்கியிருந்தது.

வேதனத்தை அதிகரிக்காத நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Abrogate Companies Covenants Suffering

அத்துடன், குறித்த வேதனத்தை செலுத்துவதற்கு ஒவ்வொரு பெருந்தோட்ட நிறுவனங்களிடமும் உள்ள இயலுமையை ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் அன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த குழுவின் விதந்துரைக்கமைய, வேதனத்தை செலுத்தாத பெருந்தோட்ட நிறுவனங்களுடனான குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW