சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் : ஹரீஸ் எம்.பி
நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் சாக்கு போக்குடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக பல தேவைகள் காத்திருந்தது எனவே பிரதேச வாதம் இனவாதம் பாராமல் நான் சேவைகளை வழங்கி வருகின்றேன்.
துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில் ஏற்பட்ட கொரோனா மூலம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நாட்டின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் உள்ள எந்த அமைச்சருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ நாட்டின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை ஆனால் இப்போது ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சில நிதி ஒதுக்கீடுகளை செய்ய முற்பட்டபோது துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஏனென்றால் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கின்றோம்.
இருந்த போதிலும் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உங்களுக்கு தெரியும் ஒரு கற்றறிந்த கல்விமான் அதேபோல இனவாத ரீதியாக சிந்திக்கின்ற ஒரு கடும்போக்கு வாதி அல்ல மக்களினுடைய பிரச்சினையினை கேட்டறிகின்ற ஒரு ஜனாதிபதியாக இருந்தபடியினால் நான் தைரியமாக சென்று நமது மாவட்டத்தின் அவல நிலை பிரச்சினைகளை எடுத்துக் கூறினேன்.
நீண்ட காலமாக நாங்கள் யுத்தத்தில் முகம் கொடுத்தது மட்டுமில்லாமல் அரசின் அபிவிருத்தித் திட்டத்தில் முழுமையாக உள்வாங்கப்படாத மாவட்டம் என்பதை சுட்டி காட்டியதால் எங்களுக்கு மெது மெதுவாக நிதிகளை ஒதுக்கீடு செய்ய ஆரம்பித்தார் அதனால்தான் நான் அம்பரை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற ஒரு கடமையில் இந்த அபிவிருத்தி திட்டத்தை உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |