இளைஞரொருவர் எடுத்த விபரீத முடிவு

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jun 24, 2023 12:50 AM GMT
Fathima

Fathima

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் ஓடும் தொடருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(23.06.2023) இரவு திருகோணமலையிருந்து கொழும்புக்குச் சென்ற இரவு நேர தபால் கடுகதி தொடருந்தில் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இளைஞரொருவர் எடுத்த விபரீத முடிவு | A Youth Committed Suicide Due To A Family Dispute

கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்த இளைஞர் திருமணமானவர் எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.