பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலி
Polonnaruwa
Sri Lanka
Sri Lanka Police Investigation
Elephant
By Rakesh
பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பொலன்னறுவை, வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று (06.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வெலிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வசந்த பண்டார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மேற்படி இளைஞர் நேற்று(06) இரவு அருகிலிருந்த காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |