இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Sri Lanka
By Nafeel May 08, 2023 03:25 PM GMT
Nafeel

Nafeel

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும், இச்சம்பவத்தில் 17 வயதான வசந்தராஜா நிலுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்திற்கு இன்று (08) வருகைதந்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -

திருகோணமலை நிருபர் பாருக்-