திருகோணமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 14, 2024 09:22 PM GMT

திருகோணமலை(Trincomalee) - ஈச்சலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(14.07.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் சுற்றிவளைப்பு

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று(14) காலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் முகத்துவாரம் பிரதேசத்தில் குறித்த கஞ்சா வியாபாரியான பெண்ணின் வீட்டை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிடுள்ளனர்.

திருகோணமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது | A Woman Drug Dealer Arrested Trincomale

இதன்போது, வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்து பெண்ணை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 12 கிராம் 11 மில்லிக்கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW