தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலி

Sri Lanka Police Colombo Sri Lanka
By Chandramathi Aug 21, 2023 03:07 AM GMT
Chandramathi

Chandramathi

கொழும்பு-கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம்(19.08.2023) இடம்பெற்றுள்ளது.

கோட்டையிலிருந்து சென்ற தனியார் பேருந்து, சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதாக பொலிஸார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்வதற்கு கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்