இஸ்ரேலின் வடக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Israel World
By Harrish Jul 06, 2024 03:46 PM GMT
Harrish

Harrish

Courtesy: Sivaa Mayuri

பிராந்தியத்தில் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் சுமார் 2,000 இலங்கையர்கள் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் விவசாயம் மற்றும் பராமரிப்பு துறைகளில் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கான  அறிவித்தல்

முன்னதாக, சிரேஸ்ட ஹிஸ்புல்லாஹ் கொமாண்டர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களால் 15,000 ஏக்கர் உலர் புல்வெளிகளும் விளைநிலங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளுக்கு தீ பரவியுள்ளதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த இஸ்ரேல் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | A Warning To Sri Lankans Living In North Of Israel

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டே, குறித்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் தமது பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய விடயங்களுக்கு அன்றி பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அவசரநிலை ஏற்பட்டால், உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது. 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்