தொடரும் சீரற்ற வானிலை: இடிந்து வீழ்ந்த கட்டடம்
ஹட்டன் (Hatton) - கினிகத்தேன காவல்துறை பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த கட்டிடம் இன்று (06) அதிகாலை 3.45 மணியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் விராஜ் விதானகே (Viraj Vithanage) தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - கொழும்பு (Colombo) பிரதான வீதியின் எல்லையில் (Ella) நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடிக் கட்டிடமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
தரமற்ற கட்டிடம்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவாதாலும் குறித்த கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் இடிந்து விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விபத்தினால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் |