கையடக்கத்தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்குமாறு கோரிக்கை

Business Mobile Samsung Galaxy Mobile Sri Lankan rupee Money
By Mubarak Aug 12, 2023 10:17 PM GMT
Mubarak

Mubarak

கையடக்கத்தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தினியாவல பாலித தேரர் முன்மொழிந்துள்ளார்.

நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இன்றைய சமூக வீழ்ச்சிக்கு கையடக்கத்தொலைபேசிகளே முக்கிய காரணம்.

இன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும், கணவன் மனைவி உறவும் தொலைந்தும், சமூகத்துடனான உறவும் இல்லாமல் போய்விட்டது.

கையடக்கதொலைபேசிகளுக்கு வரி

திருட்டு, குற்றம், பலாத்காரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அனைத்தும் இந்த கையடக்கத்தொலைபேசி மூலம் எளிதாக்கப்படுகிறது.

முடிந்தால் கையடக்கத்தொலைபேசிகளை அகற்றவும்.

இல்லை என்றால் அனைவராலும் கையடக்கத்தொலைபேசிகளை வாங்க முடியாதவாறு ஒரு இலட்சம் ரூபாவாவது வரி விதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

கையடக்கத்தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்குமாறு கோரிக்கை | A Tax Of Rs 1 Lakh Per Mobile Phone