கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு

Kilinochchi Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Jul 06, 2024 09:02 PM GMT

கிளிநொச்சி  இரணைமடு சந்திக்கு அண்மித்த பகுதியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நேற்று (06) மாலை பயணித்த பேருந்தில் இருந்த இருவர் மீதே குறித்த வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸார்

இதன்போது, தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு | A Sword Cut On Two People In Kilinochchi

 மேலும், விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்...!