முல்லைத்தீவில் பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன்

Sri Lanka Police Mullaitivu Sri Lanka School Incident
By Shalini Balachandran Jul 28, 2024 12:13 PM GMT

முல்லைத்தீவில் (mullaitivu) மாணவனொருவர் பாடசாலையிற்கு கஞ்சா பொதி ஒன்றினை எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தரம் எட்டில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும் போது சிறு கஞ்சா பொதி ஒன்றினை கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சிடல் பணி குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சிடல் பணி குறித்து வெளியான தகவல்

பொலிஸார் விசாரணை

குறித்த பொதியை அவதானித்த சக மாணவன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளதையடுத்து இது தொடர்பாக அந்த மாணவனை விசாரித்த பாடசாலை அதிபர் மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

முல்லைத்தீவில் பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன் | A Student Took Cannabis To School

இதையடுத்து, மாணவனுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது மற்றும் வீட்டில் கஞ்சா பாவனை இடம்பெறுகின்றதா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

யாழ் சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW