டென்மார்க்கில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு : முகநூலில் பரவும் போலி விளம்பரம்

Facebook Sri Lanka Denmark
By Fathima May 30, 2024 01:44 AM GMT
Fathima

Fathima

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் கும்பல் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலி தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த போலி தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல்வேறு வேலைகள்

இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள், செவிலியர்கள், பேக்கிங் தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாவலர்கள், கொத்தனார்கள், கட்டுமான தொழிலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

டென்மார்க்கில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு : முகநூலில் பரவும் போலி விளம்பரம் | A Scam That Creates Danish Jobs From Facebook

வேலைக்காக வெளிநாடு செல்வது இலவசம் என்றும், மாதச் சம்பளம் மூன்று லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

உயர் தொழில் தகைமைகளைக் கொண்டவர்களுக்குக் கூட தொழில் வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வைத்தியர் இந்துனில் விஜேரத்ன தெரிவித்தார்.

முற்றிலும் மோசடியான வர்த்தகம்

பேஸ்புக்கில் இந்த பதிவை ஏராளமானோர் பார்த்துவிட்டு, நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு குறித்து விசாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

டென்மார்க்கில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு : முகநூலில் பரவும் போலி விளம்பரம் | A Scam That Creates Danish Jobs From Facebook

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிக்கையில், ​​இது முற்றிலும் மோசடியான வர்த்தகம் எனவும், டென்மார்க் போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான தொழில் வாய்ப்புகள் தமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.