பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அனைத்து பாடசாலை மாணவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு நாளைய தினம் (28.06.2024) பணிக்கு சமூகமளிக்குமாறு, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27.06.2024) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றி மாணவர்களுக்கு தொடர்ச்சியான கல்வியை வழங்கி வருகிறது.
மாணவர்கள் பாதிப்பு
இந்த ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அந்த பாடசாலைகளில் கல்வி கற்க முடியாத மாணவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும். எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடன் பெறுவதற்கோ அல்லது பணம் அச்சிடுவதற்கோ திறைசேரியினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |