தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lankan Tamils Dr. S. Ramadoss Tamil nadu
By Independent Writer Nov 06, 2025 09:22 AM GMT
Independent Writer

Independent Writer

 பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்குரிமை மற்றும் முழு குடியுரிமை வழங்குமாறு இந்திய மத்திய அரசிடம் பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராம்தாஸ், கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏராளமான இலங்கை அகதிகள் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள்

இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்ததாக ராம்தாஸ் கூறினார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கை | A Request For Sri Lankan Refugees In Tamil Nadu

நேற்று (05) வெளியிட்ட அறிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார்.

"2009 இல் போர் முடிவடைந்த பிறகும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு தொடர்ந்து தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று, கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்டில் 116 அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

சுதந்திர குடிமக்களாக வாழ அனுமதிக்கப்படவில்லை

இந்தியாவில் பல தசாப்தங்களாக வாழ்ந்தாலும், இந்த அகதிகள் இன்னும் சுதந்திர குடிமக்களாக வாழ அனுமதிக்கப்படவில்லை. இங்கு பிறந்து படித்த இளைய தலைமுறையினர் இன்னும் அடிப்படை உரிமைகளை இழந்துள்ளனர்."

"பலர் தங்கள் பள்ளி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை முடித்துள்ளனர். ஆனால் சட்டப்படி அவர்களால் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை," என்று ராம்தாஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW