வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலி

Colombo Sri Lanka Police Investigation Accident
By Fathima Jun 29, 2023 01:05 PM GMT
Fathima

Fathima

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (28.06.2023) காலை மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகரான, பாணந்துறையைச் சேர்ந்த ஜகத் சமிந்த பெரேரா என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலி | A Police Inspector Died In A Car Accident

பொலிஸார் விசாரணை

சைக்கிளில் பயணித்த பொலிஸ் பரிசோதகர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் பரிசோதகரை எதிரே வந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.