பேலியகொடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sri Lanka Police
By Mayuri Aug 10, 2024 10:49 AM GMT

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கறுத்த பாலத்துக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருள்

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது | A Person Was Arrested With Ice Drug In Peliyagoda

சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW