யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
By Fathima
யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (10.01.2024) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட 80 கிலோகிராம் அளவிலான கேரளா கஞ்சாவானது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த வேளையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.