திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
திருகோணமலை- விஜிதபுர பகுதியில் கஞ்சா போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (09.08.2023) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- விஜிதபுர பகுதியைச் சேர்ந்த
40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் சூழ்ச்சிகரமான முறையில் விற்பனை செய்து வருகின்றமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் பல வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.