மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

Sri Lanka Police Sri Lanka Weather
By Badurdeen Siyana May 30, 2023 12:29 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

மின்னல் தாக்கியதில் கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(29.05.2023) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி | A Person Has Died Due To Lightning

இவ்வாறு உயிரிழந்தவர் அக்போபுர-படுகச்சிய பகுதியைச் சேர்ந்த முகம்மது லத்தீப் முஹம்மது மபாஸ் (36வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்போபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.