நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த கஞ்சா பொதி மாயம்: விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை

Kilinochchi
By Sheron Oct 08, 2023 04:00 PM GMT
Sheron

Sheron

கிளிநொச்சி நீதிமன்றில் பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் தொடர்பில் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மாயமாகியுள்ளமையும் நேற்றையதினமே (08.10.2023) கண்டறியப்பட்டதையடுத்து, புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுமட்டுமன்றி களஞ்சியப் பகுதியிலிருந்து மதுபானங்கள் உள்ளிட்ட அழிக்கப்பட வேண்டிய பொருட்களும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊழியர்கள் மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த கஞ்சா பொதி மாயம்: விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை | A Package Of Ganja In The Court Safe Was Stolen

உடைக்கப்பட்ட பூட்டு

களஞ்சிய பொறுப்பில் இருந்த இருவர் கனடா செல்ல முற்பட்ட நிலையில் அவர்களிற்கான பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், துப்புரவு பணியிலிருந்த பெண் ஒருவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்ல முற்பட்ட ஒருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்ற சான்றுப் பொருள் களஞ்சியத்திற்கு பொறுப்பான ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பதிவாளருக்கு வழங்கிய தகவலிற்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.