காசா என்ற பெயரில் ஈரான் உருவாக்கியுள்ள புதிய ஆயுதம்!
ஐ.ஆர்.ஜி.சி எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாவல் படைகள் காசா என்ற பெயரில் புதிய ஆளில்லா விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கிரேட் ப்ராபிட் அதாரிட்டி(Great Profit Authority) என்ற பெயரில் நடைபெற்ற இராணுவ ஒத்திகை நிகழ்ச்சியின் போது இந்த ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டது
புதிய ட்ரோன்
இந்த ட்ரோனின் இறக்கையின் பரப்பளவு 22 m ஆகும். 3100 kg எடை கொண்டதுடன், மணிக்கு 350 km வேகத்தில் 35 மணி நேரம் தொடர்ந்து பறந்து சென்று தாக்கும் சக்தி படைத்தத இந்த ஆளில்லா விமானத்தில் 500 kg வெடிமருந்துகளை எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 13 வெடிகுண்டுகள் காணப்படுவதுடன், 1000 km தூரம் சென்று தாக்கக்கூடியது.. மேலும், ஒரு புள்ளியில் இருந்து இயங்கும்போது சுற்றிலும் உள்ள 4000 km தூரம் இதன் சுற்று இலக்காக அமையும்.
இந்த நிலையில் நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியின் போது காசா ஆளில்லா விமானம் எட்டு இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியது.
அத்துடன், இது குறித்து இஸ்லாமிய புரட்சி பாதுகாவல் படையின் தளபதி ரியர் அட்மிரல் அல்லி ரெசா தங்கிரி(Ally Reza Tangri) இந்த ஆளில்லா விமானம் AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |