இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு

Sri Lanka Earthquake
By Fathima Jun 06, 2023 05:37 AM GMT
Fathima

Fathima

கம்பளை பகுதியில் 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு (05.06.2023) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த விடயத்தை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை கடந்த மாதம் 15ஆம் திகதி இரவு வேளையில் கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்திருந்தது.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சூழலில் மீண்டும் இரவு வேளையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.