மன்னாரில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு
புத்தளம்(Puttalam) நுரைச்சோலைப் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மேற்கண்டவாறு மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இரும்புக் கம்பிகளினால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கம்பி படிகளில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மின்சாரத் தாக்கம்
அத்துடன், இரும்புப் படிக்கட்டில் ஏறி நின்று வேலை செய்த நிலையிலே, படிக்கட்டு மீது மின்சாரம் பாய்ந்துள்ளதுடன் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி B.M ஹிஸாம் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இவ்வாறு உயிரிழந்த மூவரின் ஜனாஸா புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இன்று(31) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணை
மேலும், புத்தளம் மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான T.B முர்சித், புத்தளம் சோல்டர்ன் முதலாம் இலக்கத்தைச் சேர்ந்த 19 வயதுடைய S.M ஜென்ஸார் மற்றும் 22 M.M.S ஹமீன் சப்ரி ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா இஷா தொழுகையின் பின்னர் மதீனா நகர் ஜும் ஆ பள்ளிவாசல் மையவாடியிலும் புத்தளம் பகாஹ் ஜும் ஆ பள்ளிவாசல் மையவாடியிலும் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |