உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

Sri Lanka Police Colombo Hospitals in Sri Lanka Death
By Fathima Dec 09, 2025 05:35 AM GMT
Fathima

Fathima

கொழும்பை அண்மித்த தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற க.பொ.த உயர்தர மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகப்படியான மாத்திரை உட்கொண்டதால் குறித்த மாணவி உயிரிழந்ததாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதி

மாணவி கடந்த 7 ஆம் திகதி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | A L Student Dies In Meegoda

உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அடிப்படை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் மாணவி உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான மருத்துவ பரிசோதனையில் மாணவி சுமார் 65 மாத்திரைகளை உட்கொண்டதாகவும், இதுவே அவர் மரணத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

இது தொடர்பாக மீகொட பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, ஆரம்பகட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கொழும்புக்கு அருகிலுள்ள மீகொட என்ற தேசியப் பாடசாலையை சேர்ந்த 18 வயது மாணவி என தெரியவந்துள்ளது.

உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | A L Student Dies In Meegoda

இந்த மாணவி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்று உயர்தரம் படிக்க தகுதி பெற்றவர் என தெரியவந்துள்ளது.

திறமையான மாணவியின் திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.