பாரிய தீ விபத்து! வர்த்தக கட்டடம் பாதிப்பு
Kalutara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Madheeha_Naz
பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (28) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேத விபரம் இதுவரை தெரிய வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.