நடுக்கடலில் மதுபான விருந்து வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல்
By Mayuri
நாடு திவாலாகி குழந்தைகள் பட்டினியால் வாடும் வேளையில் அரசாங்க எம்.பிக்கள் குழுவொன்று நடுக்கடலில் மதுபான விருந்து வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விருந்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மாணவர்களுக்கு பருவச் சீட்டு வழங்க முடியாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களை நடுக்கடலில் வைத்து விருந்து வைக்க அரசாங்கம் அனுமதிப்பது அநியாயம் எனவும் தெரிவித்தார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்