அம்பாறையில் உலமாவின் பிரதிநிதி குழு சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் குழுவொன்று 'குரல்' அமைப்பை அம்பாறை - அக்கரைப்பற்று கிளைக்காரியத்தில் சந்தித்ததுள்ளது.
இச்சந்திப்பானது கடந்த (27.05.2023) திகதியன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் கடந்த 07 வருடங்களாக இந்நாட்டில் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற ''குரல்'' என்ற அமைப்புக்கு ஜம்இய்யா தனது நன்றிகளை தெரிவித்ததுள்ளது.

குரல் அமைப்பின் உறுப்பினர்கள்
அத்துடன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், அக்கறைப்பற்று பிரதேசக் கிளை செயலாளர் உட்பட காரியக் குழு உறுப்பினர்கள் மற்றும் குரல் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


