பொருட்களின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Madheeha_Naz Jul 20, 2024 02:35 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

உரிய பரிந்துரைகள்

இதன்போது நுகர்வோர் சட்டத்தை திருத்துவதற்கான உரிய பரிந்துரைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை | A Control Price May Be Fixed For Certain Goods

அடுத்த சில மாதங்களில் மக்களுக்கு மேலும் பல்வேறு நிவாரணங்கள் கிடைக்கும் என்று எமக்கு நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் நலின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''அது மட்டுமன்றி, தற்போது வாரத்திற்கு ஒருமுறை 15 அத்தியாவசியப் பொருட்களின் விலையை அறிவித்து வருகின்றோம்.

நுகர்வோர் சட்டத்தில் திருத்தம்

ஆனால் அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோர்களுக்கு கிடைக்காமை அவதானிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் வர்த்தக சங்கங்களுடன் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.

பொருட்களின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை | A Control Price May Be Fixed For Certain Goods

அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும்.

நுகர்வோர் சட்டத்தில் திருத்தம் செய்ய சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. நுகர்வோர் மற்றும் வர்த்தகர் இடையே உள்ள புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.''என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.