அரச நிறுவன பிரதானிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Jul 09, 2024 07:32 AM GMT

அரச அச்சகமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் அதிகாரம்

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவன பிரதானிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு | A Call Regarding The Presidential Election

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW